Saturday, December 28, 2013

தமிழும் தமிழரும்

ஒவ்வொரு தமிழனும் பிறரிடம் சொல்லி பெருமை  பட வேண்டிய ஒரு விந்தை தமிழில் உண்டு

தமிழ் என்ற சொல்லை உச்சரிக்கும் போது
"நா"(Tongue) மட்டுமே  மடிகிறது (Fold/Death) ஆனால் 
நான் வாழ்கிறேன் (Live)

தமிழ் என்ற சொல்லை உச்சரிப்பவர்கள் நாவை மட்டுமே மடிய வைத்து தமிழ் பேசியவர்களை வாழ வைக்கிறது தமிழ் மொழி 

Wednesday, December 18, 2013

காதலிக்கும் பெண்



காதலிக்கற பொண்ணும்
கடலும் ஒண்ணு

"அலை"ய  விடுறாளே

Friday, October 18, 2013

காதல் கவிதைகள்

உவமை  கொண்டு
புலமை கொண்டு
வந்ததல்ல என் காதல் கவிதைகள்

உன் பெண்மை கண்டு
உன் கண் மை கண்டு தடுமாறிய
என் உண்மை உணர்வுகள்
என் பேனா மையினால் பெருக்கெடுத்து
என் காதல்
உன் தாள் சேரும் முன்
என் ஏட்டு  தாளில் பதிந்த
அந்த புனித சொற்களே
என் காதல் கவிதைகள்


கணிப் பொறியாளனைப் பார்த்து ஞாயிறு

தேதித் தாளை கிழிக்கும் கணிப் பொறியாளனைப் பார்த்து
சொன்னது ஞாயிறு
நீ இன்று கிழித்தது ஞாயிறு
நாளையிலிருந்து கிழியப்போவது உன் ட்ராயிரு 

காதலியைப் பார்த்து காதலன்



இரட்டைக் கால் மலரே
நீ கொண்டது வெறும் இரு இதழ்கள்
இருந்தும் என் கண்ணுக்கோ
நீ ஒரு  பூங்காவனம்


கடலலை



காதலின் இனிமையை உணர்ந்த கடல்
காதலர் காலடி சுவடுகளைத்   தொட்டு வணங்கிட
அலை கரங்களுடன்  ஓடி வருகிறதா  கரையை நோக்கி ?

Friday, May 24, 2013

நண்பர்கள்



உயிர் நண்பர்கள் உதடுகள் போல
பிரிந்தால் பேசுவார்கள்
இணைந்தால் புன்னகைப்பார்கள்

சிகரெட்

மரணத்திற்கு ஒத்திகை பார்ப்பது போல்
மெய் மீது வைக்கப்படும் கொள்ளி கட்டையை
மனிதன் உயிருடன் இருக்கும் போது
வாயுள்ளே வைக்கும் பொருள் சிகரெட்

வஞ்சனை

பணத்தைத்  திருடும் கள்வனுக்கும்
மனதைத்  திருடும் காதலனுக்கும் தண்டனை உண்டு
கள்வனுக்கு சிறைச்சாப்பாடு
காதலனுக்கு கல்யாண சாப்பாடு

Thursday, May 23, 2013

காதல் ஜோடிகள் - ராகவ் ஸ்ரீநிவாஸ் இசை



அக்டோபர்   மாதக் குளிரே 
சிறு  பூவின்  செல்லப்  பனியே 
எப்போதும்   எந்தன்  கனவே  - ஹோ 
என்  அன்பே 

ஜூன் ஜூலை மாதக் காற்றே 
வந்தாய் நீ தன்னந்   தனியே 
இனி எந்தன் வாழ்வும் சுகமே 
என் நெஞ்சே 

வந்தாயே நீ எந்தன் வாழ்வில் 
கண்டேனே நான் என்னை நானே 
காதல் பூப்பூக்குதே 

முத்தத்தில் எப்போதும் இன்பம் 
முடியாதே நம் காதல் பந்தம் 
ஆசை தாலாட்டுமே 

என் இதயம்  உன் இடமே 
என் கனவில் உன் முகமே 

இரவின் பரிதவிப்பு - சிவசுந்தர் இசை

https://soundcloud.com/#shivsu/iravin-parithavippu

ஒரு முறை பார்த்ததும்
இதயங்கள்  சேருதே
இது தான் காதலா ?

விடுமுறை வேண்டாம்
இடைவேளை   வேண்டாம்
சொல் என் காதலா !!!

விரல் தொடும் தூரத்தில் விருந்தென
தெரிந்ததும் தவிக்கிறேன்
நான் தவிக்கிறேன்

கனவினில் தினம் உனை
இரு கையால்
அணைத்திட துடிக்கிறேன்
நான் துடிக்கிறேன்

அடடடா காதலில் கற்பனை உலகில் பறக்கும் எண்ணத்தின் சிறகுகள்

இடை பிடிதிழுத்ததும்
 இதழ் முத்தம் கொடுத்ததும்
சிலிர்க்கிறேன் நான் சிலிர்க்கிறேன்

மீசைத்  தூரிகை ஓவியம் வரைந்ததை
சுகிக்கிறேன் நான் சுகிக்கிறேன்

யாக்கையைப்  பார்கையில் ஆணின் மனதில் தோன்றும் பற்பல ஆசைகள்