Saturday, November 8, 2014

விஷ்வ குமார்




உலக நாயகனுடன் பிறந்த நாள் காணும் எங்கள் 
உலோக நாயகனே 

சமன்பாடு என்றாலே மதிப்பெண்கள் வாங்க அவை 
இடர்பாடு 

அதை மனப்பாடம் செய்யும் மாணவர்களுக்கு 
பெரும்பாடு 

உங்களால் தானே எங்களுக்கு அறிவியலில் வந்தது 
 ஈடுபாடு 

பாடம் பயில பல மாணவர்கள் வந்தடைந்தனர் கீரைக்கடை சந்தை 
அங்கே நீ விதைத்தாய் எங்களுக்குள் பற்பல அறிவியல் சிந்தை 

தனிங்மகள் பற்றி மட்டுமா நடத்துகிறாய் 
தனிமனித ஒழுக்கதுக்கே ஒரு சான்றாக நடந்தல்லவா காட்டுகிறாய் 

நாடி வந்த பலரை பலர்
நாடி பிடித்துப்  பார்க்கச்  செய்துவிட்டாய் 

தேதிகளுடன் சம்பவங்களை நினைவு வைத்திருக்கும் 
வேதியல் ஐயா 

தகரம் வெள்ளி பற்றி படித்தாய் 
தங்கப் பதக்கம் பெற்று 
சிகரம் பிடித்தாய் 

ஒப்புமை கொடுத்து பாடங்களை புரிய வைக்குமுனக்கு 
ஒப்பு வேறு எவரும் இல்லை 

உஷாவை மணந்தாலும் எங்கள் வாழ்வில் நீ 
விடிவெள்ளி 

பான்ட் பைக்குள் கை விட்டபடி  
வரம் தரும் தெய்வம் 
பெத்தி செமினேரில் மட்டும்  தான் 
காண முடியும் 

நீ பூத்த புன்னைகையில் 
புதுவையில் பூத்தன பல 
பொன்னகைகள் 


அடி ஏன் தந்தாய் 
அடியேன் வாழ்வில் உயர 

அடுத்த பிறப்பிலும் இச்சிறியனுக்கு 
நீயே ஆசிரியனாக வேண்டும் 

சரண்யாவின் தந்தையே வாழ்த்த வயதில்லை உன் பொற்பாதங்களுக்கு 
சரணங்களே 




No comments:

Post a Comment